செய்திகள்

கோரிக்கையை அரசு ஏற்றதால் 7 நாள் உண்ணாவிரதத்தை கைவிட்டார் அன்னா ஹசாரே

Published On 2019-02-05 15:11 GMT   |   Update On 2019-02-05 15:11 GMT
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா நியமனம் தொடர்பான கோரிக்கையை மகாராஷ்டிரா மாநில அரசு ஏற்றதால் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதப் போராட்டதை இன்று கைவிட்டார். #AnnaHazare #DevendraFadnavis #AnnaHazarefast
மும்பை:

தேசிய அளவில் லோக்பாலையும், மாநில அளவில் லோக் ஆயுக்தாவையும் அமைக்க வேண்டும், விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார்.
 
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தன்னுடைய சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ரலேகன் சித்தியில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ந் தேதி அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார். அன்னா ஹசாரேவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல் எடை நான்கரை கிலோ குறைந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தனர். 

உடல்நிலையை கருத்தில் கொண்டு தொடர் உண்ணாவிரதத்தை அன்னா ஹசாரே முடித்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.



இதற்கிடையே, 7-வது நாளாக இன்றும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னா ஹசாரேவை மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று சந்தித்தார். அப்போது, வரும் சட்டசபை தொடரில் லோக்பாலுக்கான புதிய மசோதா அறிமுகப்படுத்தப்படும் என முதல் மந்திரி பட்னாவிஸ் வாக்குறுதி அளித்தார்.

அவருடன் மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதா மோகன் சிங், பாதுகாப்புத்துறை இணை மந்திரி சுபாஷ் பாம்ரே ஆகியோரும் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு அன்னா ஹசாரேவிடம் வலியுறுத்தினர். 

இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா அரசு தரப்பில் பட்னாவிஸ் அளித்த வாக்குறுதியை ஏற்று அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார். #DevendraFadnavis #AnnaHazare #AnnaHazarefast

Tags:    

Similar News