செய்திகள்

70 ஆண்டுகளாக ஒரு சன்னியாசிக்கு கூட பாரத ரத்னா விருது தரப்படவில்லை - பாபா ராம்தேவ் வேதனை

Published On 2019-01-27 09:06 GMT   |   Update On 2019-01-27 09:06 GMT
இந்திய வரலாற்றில் கடந்த 70 ஆண்டுகளாக ஒரு சன்னியாசிக்கு கூட பாரத ரத்னா விருது தரப்படாதது துரதிர்ஷ்டவசமானது என யோகா குரு பாபா ராம்தேவ் வேதனை தெரிவித்துள்ளார். #BharatRatna #BabaRamdev
புதுடெல்லி:

இந்த ஆண்டுக்கான  ‘பாரத ரத்னா’ விருதுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நானாஜி தேஷ்முக், பூபேன் ஹசாரிக்கா ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்திய வரலாற்றில் கடந்த 70 ஆண்டுகளாக ஒரு சன்னியாசிக்கு கூட பாரத ரத்னா விருது தரப்படாதது துரதிர்ஷ்டவசமானது என யோகா குரு பாபா ராம்தேவ் வேதனை தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட மஹரிஷி தயானந்த சரஸ்வதி, சுவாமி விவேகானந்தா, சிவகுமார சுவாமிஜி ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் காலமான சித்தகங்கா மடத்தின் தலைமை ஜீயர்  சிவகுமார சுவாமிஜி-க்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் நிலையில் பாபா ராம்தேவ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #BharatRatna #BabaRamdev
Tags:    

Similar News