செய்திகள்

முன்னாள் ராணுவ வீரர்களுடன் உரி திரைப்படம் பார்த்த நிர்மலா சீதாராமன்

Published On 2019-01-27 09:00 GMT   |   Update On 2019-01-27 09:00 GMT
ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பெங்களூரு நகரில் முன்னாள் ராணுவ வீரர்களுடன் அமர்ந்து 'உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ திரைப்படத்தை பார்த்து ரசித்தார். #NirmalaSitharaman #Uri
பெங்களூரு:

ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லையை ஒட்டிய உரி பகுதியில் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு அதிரடி படையினர் கடந்த 2016-ம் ஆண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 17 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அதிரடியாக ’துல்லியமான தாக்குதல்’ (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்திவிட்டு, வெற்றிகரமாக திரும்பி வந்தனர். இந்திய வீரர்களின் இந்த சாகசத்தை மையமாக வைத்து  ‘உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்’  என்ற பெயரில் இந்தி திரைப்படம் தயாரானது.

பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பெங்களூரு நகரில் முன்னாள் ராணுவ உயரதிகாரிகள், முன்னாள் வீரர்களுடன் அமர்ந்து  பார்த்து ரசித்தார்.

முன்னதாக, பெலன்டுர் பகுதியில் உள்ள சென்ட்ரல் ஸ்பிரிட் மாலுக்கு படம் பார்க்கவந்த நிர்மலா சீதாராமனுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. #NirmalaSitharaman  #Uri  
Tags:    

Similar News