செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- பாதுகாப்பு படையினர் அதிரடி

Published On 2019-01-21 08:42 GMT   |   Update On 2019-01-21 08:42 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JKEncounter #Militants
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பத்காம் மாவட்டத்திற்குட்பட்ட  ஹப்பாட்நகர் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்று, பயங்கரவாதிகள் இருந்த வனப்பகுதியை சுற்றி வளைத்து  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில்  தாக்குதல் நடத்தினர். சிறிது நேரம் நீடித்த இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.



பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னரே தேடுதல் வேட்டை, துப்பாக்கிச் சண்டையாக மாறியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அப்பகுதியில்  மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என பாதுகாப்பு படையினரால் சந்தேகிக்கப்படுகிறது. எனவே, தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

சண்டை நீடித்து வரும் நிலையில், அப்பகுதியில் சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக போலீசார், டுவிட்டர் பக்கத்தில், தெரிவித்துள்ளனர்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு, பயங்கரவாதிகள் மாநிலத்தில் பெரும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. #JKEncounter #Militants 
Tags:    

Similar News