செய்திகள்

சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் - மத்திய அரசு உத்தரவு

Published On 2019-01-18 02:59 GMT   |   Update On 2019-01-18 02:59 GMT
ராகேஷ் அஸ்தானா சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. #RakeshAsthana #CBI
புதுடெல்லி:

சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனராக பதவி வகித்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மத்திய அரசால் கடந்த அக்டோபர் மாதம் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மா, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக பதவி ஏற்றார். பின்னர் அவரை மத்திய அரசு தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக நியமித்ததால், அவர் பணியில் இருந்து விலகி விட்டார்.

இதேபோல் ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு, அவரது அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. இந்தநிலையில், ராகேஷ் அஸ்தானா நேற்று திடீரென்று சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.



சி.பி.ஐ. இணை இயக்குனரான அருண்குமார் சர்மா, டி.ஐ.ஜி. மனிஷ் குமார் சின்கா, சூப்பிரண்டு ஜெயந்த் ஜே நாயக்னாவரே ஆகிய மேலும் 3 அதிகாரிகளும் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.  #RakeshAsthana #CBI

Tags:    

Similar News