செய்திகள்

புதிய பதவியை ஏற்க மறுப்பு - ராஜினாமா செய்தார் அலோக் வர்மா

Published On 2019-01-11 10:48 GMT   |   Update On 2019-01-11 10:48 GMT
மத்திய அரசு வழங்கிய தீயணைப்புத்துறை இயக்குநர் பதவியை ஏற்க மறுத்த சிபிஐ முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். #AlokVarma
புதுடெல்லி: 

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது, மீண்டும் அவரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, அலோக் வர்மா மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.

டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நியமனக்குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, நீதிபதி ஏ.கே.சிக்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்முடிவில், சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்க முடிவானது.



இதற்கிடையே, சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா, தீயணைப்புத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், மத்திய அரசு வழங்கிய தீயணைப்புத்துறை இயக்குநர் பதவியை ஏற்க மறுத்த சிபிஐ முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். 

இதுதொடர்பாக அவர் மத்திய பணியாளர் அமைச்சக செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இன்றோடு என் பணிக்காலம் முடிவடைந்ததாக ஏற்றுக்கொள்ளுங்கள். தீயணைப்புத்துறை இயக்குநர் பணிக்கான வயது வரம்பை நான் முன்பே கடந்துவிட்டேன். மீண்டும் முன்பே முடித்த பணிக்கு செல்வது ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார். #AlokVarma
Tags:    

Similar News