செய்திகள்

பாராளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டம் 31-ம் தேதி தொடக்கம்

Published On 2019-01-09 09:25 GMT   |   Update On 2019-01-09 09:25 GMT
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கூட்டம் வரும் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதிவரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. #InterimBudget #BudgetSession
புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவைக்கு வரும் மே மாதத்துக்குள் தேர்தல் நடைபெற வேண்டும். அதற்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் வழக்கம்போல் வரும் மார்ச் மாதத்தில் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய அரசு தாக்கல் செய்ய இயலாது.

எனவே, அரசின் செலவினங்களுக்காக சில துறைகளுக்கு நிதியாதாரங்களை ஒதுக்கீடு செய்வதற்காக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இந்நிலையில்,  இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பாராளுமன்ற கூட்டம் வரும் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதிவரை நடைபெறும். பிப்ரவரி முதல் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


கோப்புப்படம்

டெல்லியில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #InterimBudget #BudgetSession  #ParliamentBudgetSession 
Tags:    

Similar News