செய்திகள்

மத்தியபிரதேசத்தில் தொழிலாளி கண்டெடுத்த வைரம் 2½ கோடிக்கு ஏலம்

Published On 2018-12-31 02:39 IST   |   Update On 2018-12-31 02:39:00 IST
மத்தியபிரதேசத்தில் தொழிலாளி கண்டெடுத்த 42.59 காரட் எடையுள்ள வைரம் 2.55 கோடிக்கு விலை போனது. #MadhyaPradesh #Diamond #Auction
பன்னா:

மத்தியபிரதேசம் மாநிலம் பன்னாவில் அமைந்துள்ள உதாலி சுரங்கத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, மோதிலால் பிராஜபதி என்ற தொழிலாளி, வைரம் ஒன்றை கண்டெடுத்தார். அந்த வைரம் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று ஏலம் விடப்பட்டது.

பல்வேறு வகையான வைரங்கள் ஏலம் விடப்பட்ட அந்த ஏலச்சந்தையில், கண்டெடுக்கப்பட்ட 42.59 காரட் எடையுள்ள இந்த வைரம் 2.55 கோடிக்கு விலை போனது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராகுல் அகர்வால் என்ற தொழிலதிபர் வைரத்தை ஏலத்துக்கு எடுத்தார்.

பின்னர் கிடைத்த ஏலத்தொகையில் 12 சதவீதம் வரித்தொகைபோக மீதமுள்ள தொகை அந்த தொழிலாளியிடமே வழங்கப்படுகிறது.   #MadhyaPradesh #Diamond #Auction
Tags:    

Similar News