செய்திகள்

சத்தீஸ்கர் அமைச்சரவை விரிவாக்கம்- 9 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்

Published On 2018-12-25 07:04 GMT   |   Update On 2018-12-25 07:04 GMT
சத்தீஸ்கரில் பூபேஷ் பாகெல் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டு, 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். #Chhattisgarh #ChhattisgarhCabinet
ராய்ப்பூர்:

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா வசம் இருந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இதில், சத்தீஸ்கர் முதல்-மந்திரியாக பூபேஷ் பாகெல் கடந்த 17-ம் தேதி பதவியேற்றார். அன்றைய தினம் டிஎஸ் சிங் தேவ், தம்ரத்வாஜ் சாகு ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்நிலையில், பூபேஷ் பாகல் தனது அமைச்சரவையை இன்று விரிவாக்கம் செய்துள்ளார். ஒரு பெண் எம்எல்ஏ உள்ளிட்ட 9 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



ராய்ப்பூரில் உள்ள போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர்கள் இந்தியில் உறுதிமொழி கூறி பதவியேற்றனர்.

சத்தீஸ்கரில் ராமன் சிங் தலைமையிலான பாஜக அரசை வீழ்த்தி, 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Chhattisgarh #ChhattisgarhCabinet

Tags:    

Similar News