செய்திகள்

சி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்

Published On 2018-12-18 15:17 GMT   |   Update On 2018-12-18 15:17 GMT
சி.பி.ஐ. இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் கூடுதல் இயக்குநராக இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. #CBINageswaraRao #CBIadditionaldirector #NageswaraRaoappointed
புதுடெல்லி:

மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குனரான அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனரான ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்த நிலையில், சி.பி.ஐ.யின் புதிய இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராகேஷ் அஸ்தானா


சி.பி.ஐ. இயக்குனருக்கும், சிறப்பு இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவை தற்காலிக சி.பி.ஐ. இயக்குநராக நியமித்து கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நாகேஸ்வர ராவ் பதவி உயர்வுடன் சி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் தேர்வு எழுதி ஐ.பி.எஸ். அதிகாரியான நாகேஸ்வர ராவ் கடந்த 2016-ம் ஆண்டில் சி.பி.ஐ. பணியில் இணைந்தார். இந்நிலையில், கூடுதல் இயக்குநர் பதவிக்கு இவரது பெயரை மத்திய மந்திரிசபையின் நியமனங்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகிறது. #CBINageswaraRao #CBIadditionaldirector #NageswaraRaoappointed
Tags:    

Similar News