செய்திகள்

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு - காஷ்மீரில் போக்குவரத்து தடைபட்டது

Published On 2018-12-15 11:43 GMT   |   Update On 2018-12-15 11:43 GMT
காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 270 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவால் வாகன போக்குவரத்து முடங்கியது. #Landslide #JammuHighway #SrinagarHighway
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இருமுக்கிய தலைநகரங்களான ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்கு இடையிலான முக்கிய நெடுஞ்சாலையாக  270 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை இருந்து வருகிறது.

இப்பகுதியில் பெய்துவரும் உறைப்பனியால் கடந்த புதன்கிழமையில் இருந்து இந்த நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்தது. இதனால், ஆயிரக்கணக்கான வாகனங்கள் நடு வழியில் நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர், நேற்றிலிருந்து ஒருவழிப் பாதையில் மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த நெடுஞ்சாலைக்கு உட்பட்ட கங்ரூ பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் இன்று காலை 11 மணியில் இருந்து மீண்டும் வாகனங்களின் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

அங்கு சாலையின் குறுக்கே குவிந்திருக்கும் மண்மேட்டை அகற்றும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. #Landslide #JammuHighway #SrinagarHighway
Tags:    

Similar News