செய்திகள்

ஞானபீடம் விருதுக்கு ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ் தேர்வு

Published On 2018-12-14 12:30 GMT   |   Update On 2018-12-14 12:30 GMT
இலக்கிய துறையில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு அளிக்கப்படும் மிக உயரிய ‘ஞானபீடம்’ விருதுக்கு ஆங்கில எழுத்தாளர் அமிதவ கோஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #JnanpithAward #AmitavGhosh
புதுடெல்லி:

இலக்கிய துறையில் சாதனை படைத்தவர்களுக்கு சாகித்ய அகாடமி, ஞானபீடம் உள்ளிட்ட விருதுகளை ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது.
 
அந்த வகையில், இந்த ஆண்டின் (54-வது) ஞானபீடம் விருதுக்கு பிரபல ஆங்கில நாவலாசிரியர் அமிதவ் கோஷ் (62) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமிதவ் கோஷ் 1956-ம் ஆண்டில் கொல்கத்தாவில் பிறந்தவர். தற்போது நியூயார்க்கில் வசித்து வருகிறார். இவரது மனைவி டெபோரா பேக்கர்.

டெல்லியில் படித்த இவர், ஆக்ஸ்போர்டு மற்றும் அலெக்சாண்டிரியா பல்கலைக்கழகங்களில் படித்துள்ளார். பத்மஸ்ரீ மற்றும் சாகித்ய அகாடமி விருதுகளை பெற்றுள்ளார்.



ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. 7 லட்சம் ரூபாய்க்கான காசோலை, தங்கமும் செம்பும் கலந்த பட்டயமும், பாராட்டுப் பத்திரம் மற்றும் பித்தளையால் ஆன கலைமகள் சிலையை உள்ளடக்கிய இந்த விருது 1961-ல் நிறுவப்பட்டது.

இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் எழுதும் எந்த ஓர் எழுத்தாளரும் இந்த விருதுக்கு தகுதியானவர் ஆவார். இதுவரை, அதிகபட்சமாக, கன்னட மொழி எழுத்தாளர்கள் 7 முறையும், இந்தி மொழி எழுத்தாளர்கள் 6 முறையும் இந்த விருதைப் பெற்றுள்ளார்கள். தமிழில் பிரபல எழுத்தாளர்கள் அமரர் அகிலன், ஜெயகாந்தன் ஆகியோர் கடந்த 1975 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் ஆகியோர் ஞானபீடம் விருதினை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #JnanpithAward #AmitavGhosh
Tags:    

Similar News