செய்திகள்

சபரிமலை பற்றி அவதூறு - ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன்

Published On 2018-12-14 13:18 IST   |   Update On 2018-12-14 13:18:00 IST
சபரிமலை பற்றி அவதூறு பரப்பியதால் கைதான ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய கேரள ஐகோர்ட்டு பம்பையில் நுழையவும் தடை விதித்து உத்தரவிட்டது. #KeralaHC #RehanaFathima
திருவனந்தபுரம்:

பி.எஸ்.என்.எல். ஊழியரும் மாடல் அழகியுமான ரெஹானா பாத்திமா சபரிமலை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டார். இதுதொடர்பாக பா.ஜனதா கட்சியினர் தொடர்ந்த வழக்கு தொடர்பாக பத்தினம்திட்டா போலீசார் அவரை கடந்த மாதம் 27-ந் தேதி கைது செய்தனர்.

கைதான ரெஹானா பாத்திமாவின் ஜாமீன் மனுவை பத்தினம் திட்டா மாஜிஸ்திரேட் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. எனவே அவர் கேரள ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு இன்று ரெஹானா பாத்திமாவுக்கு ஜாமீன் வழங்கியது. அதே நேரம் அவர் பம்பையில் நுழையவும் தடை விதித்து உத்தரவிட்டது. #KeralaHC #RehanaFathima

Tags:    

Similar News