செய்திகள்

பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சுர்ஜித் பல்லா ராஜினாமா

Published On 2018-12-11 06:06 GMT   |   Update On 2018-12-11 06:24 GMT
பிரதமரின் பொருளாதார ஆலோசகரான சுர்ஜித் பல்லா இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். #SurjitBhalla
புதுடெல்லி:

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் 6 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் ஒன்றை பிரதமர் மோடி அமைத்தார். இந்த ஆலோசனை கவுன்சிலின் தலைவராக நிதி ஆயோக் உறுப்பினரான தேப்ராய் பதவி வகிக்கின்றார். இந்த குழுவின் பகுதிநேர உறுப்பினராக பொருளாதார நிபுணரும் கட்டுரையாளருமான சுர்ஜித் பல்லா பதவி வகித்து வந்தார்.

பொருளாதார நிபுணர்கள் ரத்தன் பி வாட்டல் (உறுப்பினர் செயலர்), ரதின் ராய் (பகுதி நேர உறுப்பினர்), ஆசிமா கோயல் (பகுதிநேர உறுப்பினர்) மற்றும் சமிகா ரவி (பகுதிநேர உறுப்பினர்) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.



இந்நிலையில், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் உறுப்பினர் பதவியில் இருந்து சுர்ஜித் பல்லா ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் பகுதிநேர உறுப்பினர் பதவியில் இருந்து கடந்த டிசம்பர் 1ந்தேதி விலகிவிட்டேன்’ என தெரிவித்து உள்ளார்.

அவரது ராஜினாமாவை பிரதமர் ஏற்றுக்கொண்டுவிட்டதாக பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சுர்ஜித் பல்லா வேறு நிறுவனத்தில் சேரவிருப்பதாக கூறியிருக்கிறார். #SurjitBhalla
Tags:    

Similar News