செய்திகள்

விலை வீழ்ச்சி, கடன் பிரச்சினை - வெங்காய வியாபாரிகள் 2 பேர் தற்கொலை

Published On 2018-12-10 09:01 GMT   |   Update On 2018-12-10 09:01 GMT
வெங்காய விலை வீழ்ச்சி மற்றும் கடன் பிரச்சினை காரணமாக மகாராஷ்டிராவில் விவசாயிகள் 2 பேர் தற்கொலை செய்தனர். #Onionfarmers #Suicide
மும்பை:

வடமாநிலங்களில் வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி காணப்படுகிறது.

நாசிக் மாவட்டத்தில் உள்ள பதாளே கிராமத்தை சேர்ந்தவர் கைர்னார் (44). விவசாயியான இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால் தனது நிலத்தில் விளைந்த 500 குவிண்டால் வெங்காயத்தை விற்க முடியாமல் அவர் கவலையுடன் இருந்தார். மேலும் வங்கியில் வாங்கிய ரூ.11 லட்சத்தை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக கைர்னார் தற்கொலை செய்து கொண்டார்.

இதே போல அதே மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் தாண்டேஜ் (33) என்ற விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் வங்கியில் ரூ.21 லட்சம் கடன் வாங்கி இருந்தார். மேலும் மொத்த விலை சந்தையில் வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காமல் விரக்தியில் இருந்தார். இதனால் அவர் தற்கொலை செய்துள்ளார்.

நாட்டின் மொத்த உற்பத்தியில் 50 சதவீத வெங்காயத்தை நாசிக் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் சாகுபடி செய்கிறார்கள். ஆனால் வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால் அவர்கள் தற்போது பரிதாப நிலையில் உள்ளனர். #Onionfarmers #Suicide

Tags:    

Similar News