செய்திகள்

கர்நாடகத்தில் மின் கட்டணம் உயர்வு? - யூனிட்டுக்கு ரூ.1.65 வரை அதிகரிக்க வாய்ப்பு

Published On 2018-12-10 03:15 GMT   |   Update On 2018-12-10 03:15 GMT
கர்நாடகத்தில் மாநில அரசு மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்பேரில் யூனிட்டுக்கு ரூ.1 முதல் ரூ.1.65 உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. #Karnataka #Powertariff
பெங்களூரு:

கர்நாடகத்தில் 2019-2020-ம் ஆண்டில் மின் கட்டணத்தை உயர்த்த மின்வாரியத்திற்கு, மின் வாரிய நிறுவனங்கள் கோரிக்கையும், சிபாரிசும் செய்துள்ளன. அதாவது பெஸ்காம் மின் வாரிய நிறுவனம் யூனிட்டுக்கு ஒரு ரூபாய் உயர்த்தவும், அதுபோல செஸ்காம் மின் வாரிய நிறுவனம் யூனிட்டுக்கு ரூ.1.65 காசுகள் அதிகரிக்கும்படியும், இதேபோன்று கெஸ்காம் மற்றும் மெஸ்காம் மின் வாரிய நிறுவனங்கள் யூனிட்டுக்கு ரூ.1.30 காசுகள் முதல் ரூ.1.45 காசுகள் வரை கட்டணத்தை உயர்த்தலாம் என்றும் மாநில அரசின் மின் வாரியத்திற்கு சிபாரிசு செய்து அறிக்கை அளித்துள்ளது.



பிற நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் மின்சாரத்தின் விலை அதிகரித்துள்ளதாலும், மின் உற்பத்தி செய்ய ஆகும் செலவு அதிகரித்துள்ளதாலும், மின் கட்டணத்தை உயர்த்த சிபாரிசு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மின் வாரிய நிறுவனங்கள் மின் கட்டணத்தை உயர்த்தும்படி கூறி கொடுத்துள்ள அறிக்கையை மாநில அரசும், கர்நாடக மின் வாரியமும் பரிசீலித்து வருவதாகவும், இதுதொடர்பாக ஆலோசித்து மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. #Karnataka #Powertariff
Tags:    

Similar News