செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்பி கட்சியிலிருந்து விலகல்

Published On 2018-12-06 09:57 GMT   |   Update On 2018-12-06 09:57 GMT
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜகவை சேர்ந்த எம்.பி சாவித்ரிபாய் புலே கட்சியில் இருந்து இன்று திடீரென விலகினார். #SavitribaiPhule #BJPMP
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் பதவி வகித்து வருகிறார்.

உ.பி.யின் பஹ்ரெய்ச் தொகுதி எம்.பியாக இருப்பவர் சாவித்ரிபாய் புலே. இந்நிலையில், சாவித்ரிபாய் புலே இன்று கட்சியில் இருந்து  திடீரென விலகினார். 



இதுதொடர்பாக அவர் கூறுகையில்,  ‘உத்தரப்பிரதேசத்தில் பாஜக சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தி ஆட்சி நடத்தி வருகிறது. இதை கண்டித்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்கிறேன்’ என்றார்.

உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்  சமீபத்தில் ஆஞ்சநேயரும் ஒரு தலித் என பேசிய சில தினங்களில் தலித் எம்.பி தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. #SavitribaiPhule #BJPMP
Tags:    

Similar News