செய்திகள்

பாபா ராம்தேவுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Published On 2018-11-30 08:09 GMT   |   Update On 2018-11-30 08:09 GMT
வாழ்க்கை வரலாறு புத்தகம் தொடர்பாக வெளியீட்டாளர் தொடர்ந்த வழக்கில் யோகா குரு பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #SCnotice #BabaRamdev #HCorder
புதுடெல்லி:

பிரபல யோகாசன குருவும், பதாஞ்சலி ஆயுர்வேத பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபருமான பாபா ராம்தேவின் வாழ்க்கையை சித்தரித்து ‘ஆன்மிகவாதியில் இருந்து தொழிலதிபர் வரை’ (Godman To Tycoon) என்ற புத்தகத்தை ஜுகர்நாட் புக்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த புத்தகத்தில் உள்ள கருத்துகள் தனது நன்மதிப்பை சீர்குலைப்பதாகவும், தொழில்ரீதியாக பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளதாகவும், இந்த புத்தகம் வெளியாவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் பாபா ராம்தேவ் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். புத்தகத்தை வெளியிட ஐகோர்ட்டும் தடை  விதித்தது.


இந்த தடையை எதிர்த்து ஜுகர்நாட் புக்ஸ் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது.  நீதிபதிகள் மதன் பி லோக்குர், தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கின் முதல் பிரதிவாதியான பாபா ராம்தேவின் கருத்தை அறிய அவருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் மறுவிசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர். #SCnotice #BabaRamdev #HCorder
Tags:    

Similar News