செய்திகள்

பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 2¾ லட்சம் பேருக்கு மானியம்

Published On 2018-11-29 06:30 IST   |   Update On 2018-11-29 06:30:00 IST
பிரதமர் மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படுகிறது. #PMModi #HousingScheme
புதுடெல்லி:

பிரதமர் மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கடனுடன் இணைந்த மானிய திட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், குறைந்த வருமானம் உள்ளவர்கள், நடுத்தர வருவாய் பிரிவினர் என 3 பிரிவுகளாக வீடுகள் கட்ட உதவி அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார செயலாளர் துர்கா ஷங்கர் மிஸ்ரா கூறுகையில், ‘பிரதம மந்திரியின் திட்டத்தின்கீழ் நகர்ப்புறத்தில் அதிக அளவு பயனாளிகள் பயன் பெற்றது குஜராத் மாநிலம் ஆகும். அங்கு 88 ஆயிரம் பேர் மானியம் பெற்று உள்ளனர். தமிழகத்தில் 12 ஆயிரம் பேரும் மானியம் பெற்று இருக்கிறார்கள். நாடு முழுவதும் 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் மானியம் பெற்று உள்ளனர்.

இந்த திட்டத்தின் கீழ் 80 லட்சம் வீடுகளை கட்ட திட்டமிடப்பட்டு இதுவரை 12 லட்சம் வீடுகள் கட்டி பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, 25 லட்சம் வீடுகள் முடியும் தருவாயில் உள்ளன’ என்றார்.
Tags:    

Similar News