செய்திகள்

பாகிஸ்தானில் இருந்து வந்த ரூ.50 கோடி ஹெராயினை காரில் கடத்திய தம்பதி கைது

Published On 2018-11-27 10:23 GMT   |   Update On 2018-11-27 10:23 GMT
பாகிஸ்தானில் இருந்து வந்த ரூ.50 கோடி ஹெராயினை காரில் கடத்திச் சென்ற கணவன் - மனைவியை பஞ்சாப் மாநில போலீசார் கைது செய்தனர். #Rs50croreheroin #heroinrecovered
சண்டிகர்:

காஷ்மீரில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு சாலை வழியாக ஹெராயின் கடத்தப்படவுள்ளதாக பஞ்சாப் சிறப்புப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதைதொடர்ந்து, லூதியானா மாவட்டத்தில் அதிகாரிகள் தீவிரமான வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு காரை மடக்கி சோதனையிட்டபோது வாதுமை பருப்பு பைக்குள் சுமார் 10 கிலோ ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

அந்த காரில் வந்த முகமது அர்பி மற்றும் அவரது மனைவி ஜமிலா பேகம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

காஷ்மீர் மாநிலம், ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஜலாலாபாத் சுஞ்சாமா கிராமத்தை சேர்ந்த அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட ஹெராயின், காஷ்மீர் எல்லைக்கோட்டு பகுதி வழியாக கடத்தி வரப்பட்டு, லூதியானாவில் உள்ள இடைத்தரகருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். #Rs50croreheroin #heroinrecovered 
Tags:    

Similar News