செய்திகள்
கோப்புப்படம்

கஜா புயல் தாக்கிய மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்க முதல்வர் கோரிக்கை

Published On 2018-11-22 10:27 IST   |   Update On 2018-11-22 10:27:00 IST
தமிழகத்தில் புயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கும்படி பிரதமரிடம் முதல்வர் கேட்டுக்கொண்டார். #PMModi #GajaCyclone #GajaCycloneRelief
புதுடெல்லி:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, கஜா புயல் பாதிப்பு மற்றும் சேதங்கள் குறித்து விளக்கினார். மேலும் புயல் சேத விவரம் அடங்கிய அறிக்கையை அளித்தார். புயல் பாதிப்பை சரி செய்ய தமிழக அரசுக்கு விரைவாக நிதி ஒதுக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.


மேலும், கஜா புயலால் ஏற்பட்ட சேத பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த மத்திய பேரிடர் ஆய்வுக்குழு விரைந்து தமிழகம் வர வேண்டும், கஜா புயல் தாக்கிய மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

முதல்வருடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.  #PMModi  #GajaCyclone #GajaCycloneRelief #CMOfficeTamilNadu

Tags:    

Similar News