சினிமா செய்திகள்

ரஜினி கேங்க்- திரைவிமர்சனம்

Published On 2025-11-27 22:18 IST   |   Update On 2025-11-27 22:18:00 IST
  • இசையமைப்பாளர் M.S. ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது.

கதாநாயகன் ரஜினி கிஷன் மற்றும் கதாநாயகி திவிகா இருவரும் காலக்கின்றனர். இவர்கள் ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கின்றனர். திவிகாவை எப்படியாவது திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிடுகிறார் அவரது மாமாவான கூல் சுரேஷ். இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்துக்கொள்வதை தெரிந்த கூல் சுரேஷ் தடுக்க முயற்சிக்கிறார். ஆனால், முனீஷ்காந்த் மற்றும் நண்பர்களின் உதவியுடன் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. பிறகுதான் தெரிகிறது, ரஜினி கிஷன் திவிகாவின் கழுத்தில் கட்டியிருக்கும் தாலியில் பேய் மறைந்து இருப்பது தெரிய வருகிறது.

பேய் இருக்கும் தாலி எப்படி இவர்கள் கையில் சிக்கியது..? திவிகாவை விட்டு பேய் விரட்டியடித்தார்களா? என்பது படத்தின் மீதிக்கதை..

நடிகர்கள்

கதாநாயகனாக நடித்துள்ள ரஜினி கிஷன் இப்படத்தி்கு பொறுத்தம். திவிகா கதாப்பாத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார். கூல் சுரேஷ், மொட்டை ராஜேந்திரன், முனீஷ்காந்த், கல்கி உள்ளிட்டோர் படத்திற்கு பலம்.

இயக்கம்

இயக்குநர் எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ள காமெடி த்ரில்லர் கதை வர்க் அவுட் ஆகியுள்ளது. முதல் பாதி படம் கொஞ்சம் இழுவையாக இருந்தாலும், இரண்டாவது பாதியில் நகைச்சுவை கலந்து ஹாரர் படமாக விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார். பேயை வைத்து கமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்.

இசை

இசையமைப்பாளர் M.S. ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

Tags:    

Similar News