செய்திகள்

தெலுங்கானாவில் முதல் முறையாக சோனியா, ராகுல்காந்தி 23-ந்தேதி பிரசாரம்

Published On 2018-11-21 08:09 GMT   |   Update On 2018-11-21 08:09 GMT
தெலுங்கானாவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருகிற 23-ந்தேதி பிரசாரம் செய்கிறார்கள். #SoniaGandhi #RahulGandhi
ஐதராபாத்:

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது.



ஆளும் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் கூட்டணி (தெலுங்குதேசம், இந்திய கம்யூனிஸ்டு, தெலுங்கானா ஜன சமிதி) பா.ஜனதா, அகில இந்திய மஜ்லிஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய 5 முனை போட்டி நிலவுகிறது.

காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வருகிற 23-ந்தேதி பிரசாரம் செய்வார்கள்.

மேட்கல் தொகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் இருவரும் பங்கேற்று பேசுகிறார்கள். மாலை 5 மணிமுதல் 6.30 மணி வரை இந்த கூட்டம் நடக்கிறது. இதற்காக இருவரும் 23-ந்தேதி மாலை 4 மணிக்கு பெகும்பேட் விமான நிலையத்தை சென்றடைவார்கள்.

தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு சோனியாகாந்தி முதல் முறையாக அங்கு செல்கிறார்.

இதை மாநில காங்கிரஸ் தலைவர் ரெட்டி தெரிவித்துள்ளார். #SoniaGandhi #RahulGandhi

Tags:    

Similar News