செய்திகள்

ஏர் இந்தியா விமானத்தில் மதுபோதையில் ரவுடித்தனம் செய்த பெண் பயணி கைது

Published On 2018-11-14 12:46 IST   |   Update On 2018-11-14 12:46:00 IST
லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் போதையில் விமான ஊழியர்களிடம் தகராறு செய்து ரவுடித்தனம் செய்த பெண் கைது செய்யப்பட்டார். #AirIndia
மும்பை:

மும்பையில் இருந்து கடந்த 10ம் தேதி சென்ற ஏர் இந்தியா சர்வதேச விமானத்தில் மதுபோதையில் இருந்த பெண் ஒருவர், அதிக மது கொடுக்காததால் விமான ஊழியர்களிடம் தகராறில்  ஈடுபட்டு உள்ளார். நான் ஒரு சர்வதேச வக்கீல், நீங்கள் பணம் பறிப்பவர்கள் என கூறி  தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

மேலும் விமான பைலட் மீது எச்சில் துப்பி உள்ளார். அங்கிருந்தவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார். மும்பையில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்த விமானம் லண்டன் சென்றடைந்ததும் அந்த பெண் கைது செய்யப்பட்டு உள்ளார்.


ரவுடி போல் நடந்துகொண்ட அந்த பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

மற்றொரு வீடியோவில், பாலஸ்தீன மக்களுக்கு உதவிய ஒரு சர்வதேச மனித உரிமைகள் வழக்கறிஞர் என்று அந்த பெண்  கத்துகிறார். #AirIndia
Tags:    

Similar News