செய்திகள்

பாஜக தலைவர் அமித் ஷா பெயரை மாற்ற வேண்டும் - ஓவைசி

Published On 2018-11-13 07:15 GMT   |   Update On 2018-11-13 07:15 GMT
நகரங்கள் பெயரை மாற்றுவதோடு பா.ஜ.க. தலைவர் அமித் ஷா பெயரையும் மாற்ற வேண்டும் என்று மஜ்லிஷ் கட்சி எம்.பி. ஓவைசி கூறியுள்ளார். #Owaisi​ #BJP #AmitShah

ஐதராபாத்:

உத்தரபிரதேசம் உள்ளிட்ட பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் முகலாயர் ஆட்சி காலங்களில் சூட்டப்பட்ட நகரங்களின் பெயர்களை மாற்றி வருகிறார்கள்.

இவ்வாறு 25-க்கும் மேற்பட்ட நகரங்களின் பெயர் இதுவரை மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மஜ்லிஷ் கட்சியின் தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான ஓவைசி தெலுங்கானாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது பெயர் மாற்றம் பிரச்சினையை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் பல நகரங்களுக்கு ஏற்கனவே இருக்கும் பெயர்களை தொடர்ந்து மாற்றி வருகிறார்கள். ஆனால், பாரதிய ஜனதா கட்சியின் தலைவரின் பெயர் அமித் ஷா என்று உள்ளது.

இதில் ஷா என்பது பெர்சிய (ஈரான்) பெயர் ஆகும். எனவே, ஷா என்ற பெயரை அவர் வைத்துக் கொள்ள கூடாது.


இதனால் அமித் ஷா தனது பெயரையும் மாற்றிக் கொள்ள வேண்டும். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஒரு லட்சம் மாடுகள் கொடுப்போம் என்று கூறுகிறார்கள்.

மாட்டுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காக மாடு கொடுக்கப் போகிறார்களா? என்னிடம் மாட்டை கொடுத்தால் நான் மரியாதை கொடுக்க முடியுமா?

ஒவ்வொரு மாடும் தினமும் 16 கிலோ தீவனம் சாப்பிடும். இவர்கள் ஒரு லட்சம் மாடுகள் கொடுத்தால் தினமும் 16 லட்சம் கிலோ உணவு தேவைப்படும். இவ்வளவு உணவுக்கு எங்கே போவது?

நான் உண்மையை பேசினால் நான் அவதூறாக பேசுவதாக கூறுவார்கள். நான் எதார்த்தத்தைதான் கூறுகிறேன்.

தெலுங்கானா மாநிலம் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் இல்லாத மாநிலமாக மாற்றப்படும்.

இவ்வாறு ஓவைசி பேசினார். #Owaisi​ #BJP #AmitShah

Tags:    

Similar News