செய்திகள்

மத்திய பிரதேச தேர்தல் - புதுமுக வேட்பாளர்களுடன் இரண்டாவது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

Published On 2018-11-05 03:51 GMT   |   Update On 2018-11-05 03:51 GMT
மத்திய பிரதேசத்தில் தற்போதைய எம்எல்ஏக்கள் மற்றும் புதுமுகங்கள் அடங்கிய இரண்டாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. #MadhyaPradeshElections #Congress #CongressCandidatesList
இந்தூர்:

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, ஆட்சியைப் பிடிப்பதற்கு காங்கிரஸ் தீவிர களப்பணியாற்றி வருகிறது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் நேற்று முன்தினம் 155 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது.

இந்நிலையில் 16 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் தற்போது எம்எல்ஏக்களாக உள்ளவர்கள் மற்றும் புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். 



ஷியோபூர் மாவட்டம் விஜய்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான ராம் நிவாஸ் ராவத் மீண்டும் போட்டியிடுகிறார். இதுதவிர மகேந்திர சிங் யாதவ், கோபால் சிங் சவுகான், விக்ரம் சிங் நதிராஜா மற்றும் பிரிஜேந்திர சிங் யாதவ் ஆகிய எம்எல்ஏக்களுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிவபுரி தொகுதியில் குவாலியர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மாநில மந்திரி யசோத்ராஜா சிந்தியாவை எதிர்த்து புதுமுக வேட்பாளரான சித்தார்த் லடா (36)  நிறுத்தப்பட்டுள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியில் இதுவரை 171 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 28-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 11ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. #MadhyaPradeshElections #Congress #CongressCandidatesList
Tags:    

Similar News