செய்திகள்

காஷ்மீர் பாஜக பிரமுகர் கொல்லப்பட்ட விவகாரம் - ராஜ்நாத் சிங் கண்டனம்

Published On 2018-11-01 22:30 GMT   |   Update On 2018-11-01 22:30 GMT
ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் கொல்லப்பட்ட விவகாரத்துக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். #MilitantsAttack #AnilParihar #RajnathSingh
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பாஜக மாநில செயலாளராக இருந்தவர் அனில் பரிஹார். அவரது சகோதரர் அஜித். இருவரும் நேற்று இரவு தங்களது கடையை மூடிவிட்டு வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

வீட்டின் அருகில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அனில், அஜீத்தை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில் படுகாயம் அடைந்த அவர்களை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.



இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் கொல்லப்பட்ட விவகாரத்துக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக பிரமுகர் மற்றும் அவரது சகோதரரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது அதிர்ச்சிகரமானது.  மிகவும் துயரத்தை தரக்கூடியது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும், அசாமில் உல்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் பலியானதற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். #MilitantsAttack #AnilParihar #RajnathSingh
Tags:    

Similar News