செய்திகள்

கோவாவில் ரூ.22 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் - வெளிநாட்டவர் கைது

Published On 2018-10-30 18:57 GMT   |   Update On 2018-10-30 18:57 GMT
கோவா விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 22 லட்ச ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #GoldSmuggling #Goa
பனாஜி:

இந்தியாவில் பண்டிகை காலங்களில் தங்கத்தின் மதிப்பு அதிகரிப்பதால் அதற்கான தேவையும் அதிகரிக்கும். அதன்படி எதிர்வரும் பண்டிகைகளை முன்னிட்டு, கடத்தல்காரர்கள் அண்டை நாடுகளில் இருந்து தங்கத்தை இந்தியாவுக்குள் கடத்துகின்றனர். இதனை தடுக்க சுங்கத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இன்று கோவா விமான நிலையத்தில் வழக்கமான சோதனையின் போது சந்தேகப்படும் படியாக இருந்த வெளிநாட்டவரிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 755 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன் மதிப்பு 22 லட்சத்து 4 ஆயிரத்து 592 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #GoldSmuggling #Goa
Tags:    

Similar News