செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறு- கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்ற மனைவி கைது

Published On 2018-10-30 12:09 GMT   |   Update On 2018-10-30 12:09 GMT
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை காதலுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொல்ல முயனற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கிருஷ்ணகுமார் வயநாட்டில் விவசாய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். கிருஷ்ணகுமார் அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம்.

இந்நிலையில் சுஜாதாவுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த சுரேஷ்பாபு (வயது 35) என்ற வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது குறித்து கணவருக்கு தெரியவந்ததும் மனைவியை கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

கள்ளத்தொடர்புக்கு கணவர் இடையூறாக இருப்பதால் கணவரை கொன்று விடலாம் என்று கள்ளக்காதலனிடம் கூறினார். இதனையடுத்து ரூ.4 லட்சம் கொடுத்து 4 பேர் கொண்ட கூலிப்படையை ஏற்பாடு செய்தனர். கணவரின் நடவடிக்கைகளை சுஜாதா அவ்வப்போது கள்ளக்காதலுக்கு போனில் தகவல் தெரிவித்தார். அவர் கூலிப்படைக்கு தகவல் தெரிவித்தார்.

நேற்று அதிகாலை 3 மணிக்கு கிருஷ்ணகுமார் வெளியூர் புறப்பட்டார். அவர் சென்ற பின்னர் அவர் என்ன ஆடை அணிந்துள்ளார். எந்த வழியே செல்கிறார் என்பது உள்பட அனைத்து விபரங்களையும் சுஜாதா கள்ளக்காதலனுக்கு தெரிவித்தார். கள்ளக்காதலன் இது குறித்து கூலிப்படைக்கு தகவல் கூறினார்.

கிருஷ்ணகுமார் வடக்காஞ்சேரி ரோட்டில் நடந்து சென்றபோது எதிரே வேகமாக ஒரு கார் வந்தது. சுதாரித்துக்கொண்ட அவர் ரோட்டை விட்டு கீழே இறங்கினார். பின்னர் அதே கார் திரும்பி வேகமாக வந்தது. அப்போது சுதாரிப்பதற்குள் கிருஷ்ணகுமார் மீது கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணகுமாருக்கு வலது கால் முறிந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விய்யூர் போலீசில் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீஜித், ஆன்ந்த் ஆகியோர் காயம் அடைந்த கிருஷ்ணகுமாரை திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து கார் மோதிய இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மோதிய கார் எண்ணை வைத்து சைபர்செல் போலீசார் உதவியுடன் கூலிப்படையை சேர்ந்த ஓமனகுட்டன், சஜித், நசுரூதீன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

அவர்கள் கூறிய தகவல்படி மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து 4 லட்சம் ரூபாய்க்கு கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. கார் மோதிய வேகத்தில் கிருஷ்ணகுமார் இறந்திருக்க வேண்டும் என்று நினைத்துவிட்டதாக கூலிப்படையினர் கூறினர்.

இதனயைடுத்து போலீசார் சுஜாதா மற்றும் அவரது கள்ளக்காதலன் சுரேஷ்பாபு ஆகியோரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் இன்று சிட்டி கமி‌ஷனர் ராஜூ விசாரணை நடத்துகிறார். #tamilnews
Tags:    

Similar News