செய்திகள்

டெல்லியில் காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை - 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கு தடை

Published On 2018-10-30 06:26 IST   |   Update On 2018-10-30 06:26:00 IST
இந்திய தலைநகர் டெல்லியில் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த, 15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகள் முடிவடைந்த டீசல் வாகனங்களுக்கும் தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SC #Delhi #AirPollution
புதுடெல்லி:

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு டெல்லி மாநகரில் 15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகள் முடிவடைந்த டீசல் வாகனங்களுக்கும் தடை விதித்தது.

தடை விதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் பற்றிய விவரங்களை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் போக்குவரத்து கழகம் தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது. #SC #Delhi #AirPollution
Tags:    

Similar News