செய்திகள்

திடீர் உடல்நலக்குறைவு - மத்திய மந்திரி அனந்தகுமார் மருத்துவமனையில் அனுமதி

Published On 2018-10-29 04:53 IST   |   Update On 2018-10-29 04:53:00 IST
மத்திய மந்திரி அனந்தகுமாருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். #UnionMinister #Anandakumar
பெங்களூரு:

மத்திய பா.ஜனதா அரசில் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரியாக இருந்து வருபவர் அனந்தகுமார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனந்தகுமார் புற்றுநோயால் அவதிப்பட்டார். அமெரிக்காவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பின்னர் உடல்நலம் சீரானது.

இந்த நிலையில் மத்திய மந்திரி அனந்தகுமாருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் புற்றுநோய் காரணமாக அவதிப்படுவதாக தெரிகிறது.

இதனை அறிந்த நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் டெல்லியில் இருந்து பெங்களூரு வந்து அனந்தகுமாரின் உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்து கொண்டனர். மத்திய மந்திரி அனந்தகுமாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News