செய்திகள்

காஷ்மீர் நகராட்சி தேர்தல் - காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி

Published On 2018-10-20 15:48 GMT   |   Update On 2018-10-20 15:48 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 157 இடங்களிலும், பா.ஜ.க. வேட்பாளர்கள் 100 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். #Congresswon157seats #KashmirCivicpolls
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மொத்தம் 79 நகராட்சிகளுக்கு நடைபெற வேண்டிய தேர்தல் போட்டியிட யாரும் முன்வராததாலும், ஒருவர் மட்டுமே போட்டியிட்டதாலும் 27 இடங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. 52 இடங்களில் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தல் நடைபெற்ற நகராட்சி பகுதிகளில் மொத்தமுள்ள 598 வார்டு உறுப்பினர் பதவிகளில் 231 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 181 வார்டுகளில் யாருமே போட்டியிடவில்லை. அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக நகராட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த 4 கட்ட தேர்தலிலும் சராசரியாக மொத்தம் 35.1 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகின.

இந்நிலையில், இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் இன்றிரவு 8 மணி நிலவரப்படி, காங்கிரஸ் வேட்பாளர்கள் 157 இடங்களிலும், பா.ஜ.க. வேட்பாளர்கள் 100 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

78 இடங்களில் போட்டியின்றியும் 79 இடங்களில் எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களைவிட அதிக வாக்குகளை வாங்கியும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வென்றுள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர்கள் 76 இடங்களில் போட்டியின்றியும் 24 இடங்களில் எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களைவிட அதிக வாக்குகளை வாங்கியும் வெற்று பெற்றுள்ளனர்.

இதேபோல், சுயேட்சை வேட்பாளர்கள் 75 இடங்களில் போட்டியின்றியும் 103 இடங்களில் எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களைவிட அதிக வாக்குகளை வாங்கியும் வென்றுள்ளனர். #Congresswon157seats #KashmirCivicpolls
Tags:    

Similar News