செய்திகள்

சபரிமலையில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு

Published On 2018-10-19 13:17 GMT   |   Update On 2018-10-19 13:17 GMT
கேரளாவில் சபரிமலையை சுற்றியுள்ள பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் பகுதிகளில் அமலில் உள்ள தடை உத்தரவு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. #144extended #sabarimala144extended #sabarimalaverdict #sabarimalaprotests
திருவனந்தபுரம்:

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதை அடுத்து, பெண்கள் கோவிலுக்குள் நுழைய முயன்றனர்.

இவர்களை நுழைய விடாமல் தடுக்கும் போராட்டம் வலுத்த நிலையில் சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இன்று ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற இரு பெண்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், மேலும் அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் தற்போது அமலில் உள்ள  144 தடை உத்தரவை  நீட்டிக்குமாறு பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து, பரிமலையை சுற்றியுள்ள பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் பகுதிகளில் அமலில் உள்ள தடை உத்தரவை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் நூஹ் இன்று மாலை உத்தரவிட்டுள்ளார். #144extended #sabarimala144extended #sabarimalaverdict #sabarimalaprotests
Tags:    

Similar News