செய்திகள்

தேர்தலுக்காகவே அயோத்தி விவகாரத்தை கையில் எடுத்துள்ளது பாஜக - தொகாடியா குற்றச்சாட்டு

Published On 2018-10-18 16:18 GMT   |   Update On 2018-10-18 16:18 GMT
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்த விவகாரத்தை தேர்தலுக்காகவே பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பயன்படுத்துவதாக பிரவீன் தொகாடியா குற்றம் சாட்டியுள்ளார். #RSS #BJP #RamTemple #Ayodhya
அகமதாபாத்:

விஜயதசமி விழாவையொட்டி இன்று பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கென தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்.

இதுகுறித்து பேசிய பிரவீன் தொகாடியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான சட்டம் குறித்து பேச ஏன் நான்கரை வருடங்கள் காத்திருக்க வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கடந்த 2017-ம் ஆண்டிலேயே ராமர் கோவில் கட்டுவதற்கு தனிச்சட்டம் இயற்ற தாம் கோரிக்கை விடுத்ததாகவும், அதற்காக தன்னையும், தனது ஆதரவாளர்களையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தண்டித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், நான்கரை வருடங்களுக்கு பிறகு இந்த விவகாரம் குறித்து சட்டம் இயற்ற சொல்லப்படுவது, தேர்தல் நெருங்குவதால்தான் என பிரவீன் தொகாடியா குற்றம்சாட்டியுள்ளார். #RSS #BJP #RamTemple #Ayodhya
Tags:    

Similar News