செய்திகள்

பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன்

Published On 2018-10-15 06:53 GMT   |   Update On 2018-10-15 06:53 GMT
கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் கைதான பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு கேரள ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. #FrancoMulakkal #KeralaHC
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அருட் கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் தன்னை பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பி‌ஷப்பாக பணியாற்றிய பிராங்கோ முல்லக்கல் கற்பழித்துவிட்டதாக பரபரப்பு புகார் கூறினார்.

இந்த புகாரை பிராங்கோ முல்லக்கல் மறுத்தார். அதே சமயம் அவரை கேரளாவுக்கு வரவழைத்து தனிப்படை போலீசார் விசாணை நடத்தினார்கள். பல நாட்கள் தொடர்ந்த விசாரணையின் முடிவில் அவரை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிராங்கோ முல்லக்கல் தற்போது கோட்டயத்தில் உள்ள பாலா ஜெயிலில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் கேரள ஐகோர்ட்டில் தனக்கு ஜாமீன் வழங்க கேட்டு பிராங்கோ முல்லக்கல் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, பிராங்கோ முல்லக்கல்லுக்கு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

பிராங்கோ முல்லக்கல் கேரளாவுக்குள் நுழையக் கூடாது, அவர் தனது பாஸ்போர்ட்டை ஐகோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும், சாட்சியங்களை கலைக்கக் கூடாது, 2 வாரத்திற்கு ஒரு முறை விசாரணை அதிகாரிகள் முன்பு அவர் ஆஜராக வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டு நிபந்தனை விதித்துள்ளது.  #FrancoMulakkal  #KeralaHC

Tags:    

Similar News