செய்திகள்

நெல்லுக்கும் கோதுமைக்கும் வேறுபாடு தெரியாதவர் - ராகுல் காந்தி மீது மத்திய மந்திரி பாய்ச்சல்

Published On 2018-10-07 20:00 IST   |   Update On 2018-10-07 20:00:00 IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நெற்பயிருக்கும் கோதுமை பயிருக்கும் உள்ள வித்தியாசம் தெரியாதவர் என மத்திய வேளாண்மைத்துறை இணை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். #RahulGandhi #GajendraSinghShekhawat
இந்தூர்:

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர் நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மைத்துறை இணை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் பங்கேற்றார்.

அப்போது, மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளை வஞ்சித்து வருவதாகவும், பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் விவசாயிகள் மிகுந்த வேதனைப்பட்டு வருவதாகவும்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்துவரும் பரப்புரை தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஷெகாவத், நெற்பயிருக்கும் கோதுமை பயிருக்கும் உள்ள வித்தியாசம் தெரியாதவர் ராகுல் காந்தி என்று குறிப்பிட்டார்.


நான் ஒரு விவசாயி, விவசாயிகள் சங்கத்தின் தலைவராகவும், மத்திய அரசில் விவசாயிகளின் பிரதிநிதியாகவும் அங்கம்வகித்து வருகிறேன். அதனால், வேளாண்மைத்துறையைப் பற்றி மற்றவர்களை விட எனக்கு அதிகமாக தெரியும்.

விவசாயிகளின் உற்பத்திக்கு உரிய விலை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக வேளாண்மைத்துறை பலப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, வெள்ளாட்டின் குட்டிக்கும், செம்மறியாட்டின் குட்டிக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்,  நெற்பயிருக்கும் கோதுமை பயிருக்கும் உள்ள வித்தியாசம் தெரியாதவர்களுக்கு எல்லாம் நான் பதில் அளித்து கொண்டிருப்பது பொருத்தமாக இருக்காது என்றும் ஷெகாவத் தெரிவித்துள்ளார். #RahulGandhi #differencebetweenpaddyandwheat #GajendraSinghShekhawat
Tags:    

Similar News