செய்திகள்

ரபேல் ஒப்பந்தத்தை எதிர்க்கும் அதிகாரிகளை மோடி அரசு ஒதுக்குவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2018-09-27 18:42 IST   |   Update On 2018-09-27 18:42:00 IST
ரபேல் போர் ஒப்பந்தம் தொடர்பாக கேள்வி எழுப்புபவர்களையும், எதிர்ப்பவர்களையும் மோடி அரசு குறிவைத்து நிராகரிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #RahulGandhi #Modi #RafaleDeal
புதுடெல்லி:

இந்தியாவுக்கு போர் விமானங்கள் வாங்குவது குறித்து மோடி அரசு பிரான்ஸ் நாட்டுடன் போட்டுக்கொண்ட ரபேல் ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. அந்த குற்றச்சாட்டு வலுசேர்க்கும் வகையில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோலண்டே, ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானி குழுமத்தை இணைத்தது இந்திய அரசின் வற்புறுத்தலினால்தான் என தெரிவித்ததாக வெளியான செய்தி அமைந்தது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தாலும் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சை தொடர்ந்து வருகிறது.



இந்த விவகாரத்தில் தொடர்ந்து மோடி அரசை காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக கேள்வி எழுப்பிய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு ஒரு மாத விடுமுறை அழித்துவிட்டு, ஒப்பந்தத்தை கையெழுத்திட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்கான ஆதாரமாக ஒரு செய்தி நிறுவனத்தின் செய்தியை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசை எதிர்ப்பவர்கள் குறிவைத்து நீக்கப்படுவதும், ஆதரிப்பவர்களுக்கு சன்மானமும் வழங்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #RahulGandhi #Modi #RafaleDeal
Tags:    

Similar News