செய்திகள்

ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் - பாஜகவுக்கு சிவசேனா வலியுறுத்தல்

Published On 2018-09-20 17:01 GMT   |   Update On 2018-09-20 17:01 GMT
முத்தலாக் பிரச்சனைக்கு அவசர சட்டம் கொண்டு வந்தது போல ராமர் கோவில் கட்டவும் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என மத்திய பாஜக அரசுக்கு சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது. #BJP #ShivSena
மும்பை:

முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை உடனடியாக விவாகரத்து செய்ய வகை செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு எதிரான அவசர சட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்தது. இவ்விவகாரத்தை குறிப்பிட்டு சிவசேனா, முத்தலாக் விவகாரத்தை போல ராமர் கோவிலை கட்டவும் அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

சிவசேனா அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில், முஸ்லிம் பெண்கள் சுதந்திரமாக வாழ மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. இதற்காக முத்தலாக் நடைமுறைக்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் திருமணமான முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது. இதை சிவசேனா வரவேற்கிறது. ஆனால், மத்திய அரசு இந்த ஒரு நடவடிக்கையுடன் நின்று விடக்கூடாது. இதே வேகத்தை அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதிலும் காட்ட வேண்டும். இதற்காகவும் அவசர சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். 

என குறிப்பிடப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News