செய்திகள்

இந்தியாவில் 27 ஆண்டுகளில் மனிதன் வாழும் வயது 11 ஆண்டுகள் அதிகரிப்பு

Published On 2018-09-15 07:21 GMT   |   Update On 2018-09-15 07:21 GMT
இந்தியாவில் 27 ஆண்டுகளில் மனிதன் வாழும் வயது 11 ஆண்டுகள் அதிகரித்துள்ளதாக ஐ.நா. நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.#unitednations

புதுடெல்லி:

ஐ.நா. மனிதவள மேம்பாட்டு ஆணையம் மனிதன் உயிர்வாழும் வயது தொடர்பாக 189 நாடுகளில் ஆய்வு நடத்தியது.

அதில் இந்தியா 189 நாடுகளில் 130-வது இடத்தை பிடித்து இருக்கிறது. 1990-ம் ஆண்டில் இந்தியாவில் மனிதன் உயிர்வாழும் வயது சராசரியாக 57.9 வருடமாக இருந்தது. 2017-ம் ஆண்டில் அது 68.8 வருடமாக அதிகரித்துள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் மனிதனின் உயிர்வாழும் வயது 11 வருடம் அதிகரித்து இருப்பது தெரியவந்தது.

அதேபோல் பள்ளி செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை 1990-ல் 7.6 சதவீதமாக இருந்தது, 12.3 சதவிதமாக அதிகரித்துள்ளது.


தனிமனிதனின் சராசரி வருவாய் 1,733-ல் இருந்து 6,353 ஆக அதிகரித்துள்ளது. மனிதவள குறியீடு 0.427-ல் இருந்து 0.640 ஆக உயர்ந்துள்ளது.

வங்காள தேசத்தில் மனிதன் உயிர்வாழும் வயது 72.8 ஆகவும், பாகிஸ்தானில் 66.6 ஆகவும் உள்ளது. இந்தியாவில் பெண்குழந்தைகள் பிறப்பு 70.4 சதவீதமாகவும், வங்காள தேசத்தில் 74.6 சதவீதமாகவும், பாகிஸ்தானில் 67.7 சதவீதமாகவும் உள்ளது.

ஆண்குழந்தை பிறப்பு இந்தியாவில் 67.3 சதவீதமாகவும், வங்காள தேசத்தில் 71.2 சதவீதமாகவும், பாகிஸ்தானில் 65.6 சதவீதமாகவும் உள்ளது. #unitednations

Tags:    

Similar News