செய்திகள்

விஜய் மல்லையா அருண் ஜெட்லியை சந்தித்த விவகாரம் - உடனடி விசாரணைக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

Published On 2018-09-12 18:18 GMT   |   Update On 2018-09-12 18:18 GMT
விஜய் மல்லையா அருண் ஜெட்லியை சந்தித்தது குறித்து பிரதமர் மோடி உடனடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். #VijayMallaya #ArunJaitley #RahulGandhi
புதுடெல்லி:

பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. 

லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர , லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 


இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜரான விஜய் மல்லையா “நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன்” என கூறியிருந்தார். ஆனால், விஜய் மல்லையாவை சந்திக்கவில்லை என அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விஜய் மல்லையா அருண் ஜெட்லியை சந்தித்தது குறித்து பிரதமர் மோடி உடனடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், லண்டன் கோர்ட்டில் விஜய் மல்லையா கருத்து தெரிவித்தது குறித்து பிரதமர் மோடி உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். விசாரணை முடியும் வரையில் அருண் ஜெட்லி நிதி மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். #VijayMallaya #ArunJaitley #RahulGandhi
Tags:    

Similar News