செய்திகள்

புகைப்படத்தை காட்டி ஏமாற்றிவிட்டதாக தற்கொலை செய்த புதுமாப்பிள்ளை

Published On 2018-09-06 14:54 GMT   |   Update On 2018-09-06 14:54 GMT
ஆந்திர மாநிலத்தில் மணமகள் அழகாக இல்லை என்ற காரணத்தால் மனமுடைந்த புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஐதாராபாத்:

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் அரசு அலுவலகம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஷேக் மைதீன். இவருக்கு சூலுரு பகுதியில் குடியிருக்கும் முபீனா என்பவருக்கும் கடந்த 2-ஆம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் திருமண நாள் மாலையில் இருந்தே மணமகன் மிகவும் வருத்தம் தோய்ந்த முகத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

அதை அறிந்த மணமகனின் தாயார், என்ன காரணம் என தமது மகனிடம் விசாரித்துள்ளார். அப்போது தமது மனைவி அழகாக இல்லை எனவும், திருமணத்திற்கு முன்னர் அவர்கள் அளித்த புகைப்படம் வேறு எனவும் பதில் அளித்துள்ளார். இதனையடுத்து மகனை சமாதானம் செய்த தாயார், மருமகளை அழைத்துக் கொண்டு தோல் நோய் மருத்துவர் ஒருவரை நாடி சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளார்.

இருப்பினும் தமது மகன் மகிழ்ச்சியுடன் இல்லை என தாயாருக்கு தெரியவந்தது. இதனிடையே செவ்வாய் அன்று இரவு நண்பரின் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்ற மைதீன், நண்பரின் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். புதுமாப்பிள்ளையை வெகுநேரமாகியும் காணவில்லை என தேடிய குடும்பத்தினர், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து தமது குடும்பத்தை ஏமாற்றியதாக கூறி மணமகளின் வீட்டார் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
Tags:    

Similar News