செய்திகள்

தேர்தலுக்கு தயாராகும் தெலுங்கானா - 105 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் சந்திரசேகர ராவ்

Published On 2018-09-06 10:19 GMT   |   Update On 2018-09-06 10:19 GMT
தெலுங்கானா மாநில சட்டசபை கலைக்கப்பட்டுள்ள நிலையில், 105 தொகுதிகளுக்கான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் வேட்பாளர்களை முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று அறிவித்தார். #Telangana #ChandrashekarRao #TRSCandidates
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவரது ஆட்சி காலம் முடிய இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், ஆட்சியை கலைத்து விட்டு முன்கூட்டியே சட்டசபை தேர்தலை சந்திக்க சந்திரசேகரராவ் முடிவு செய்தார். அதன்படி இன்று அமைச்சரவையை கூட்டி சட்டசபை கலைக்க முடிவு செய்யப்பட்டது.



இதையடுத்து ஆளுநர் நரசிம்மனை சந்தித்த சந்திரசேகர ராவ், சட்டசபையை கலைப்பது தொடர்பான பரிந்துரை கடிதத்தை வழங்கினார். இந்த பரிந்துரையை ஆளுநர் நரசிம்மன் ஏற்றுக்கொண்டார். அதேசமயம், புதிய அரசு அமையும் வரை ஆட்சியை தொடருமாறு முதல்வர் சந்திரசேகராவிடம் கேட்டுக்கொண்டார். ஆளுநர் விடுத்த கோரிக்கையை சந்திரசேகர ராவ் ஏற்றுக்கொண்டார்.

இதற்கிடையே சட்டசபைத் தேர்தல் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய சந்திரசேகர ராவ், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று  வெளியிட்டுள்ளார். மொத்தம் உள்ள 119 தொகுதிகளில், இன்று வெளியிட்டுள்ள பட்டியலில் 105 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மீதமுள்ள தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்களை அறிவிக்க முடிவு செய்துள்ளார்.

புதிதாக உதயமான தெலுங்கானாவில் 2014-ம் ஆண்டு நடந்த முதல் சட்டசபை தேர்தலில மொத்தம் உள்ள 119 இடங்களில் சந்திரசேகரராவின் கட்சி 90 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது. #Telangana #ChandrashekarRao #TRSCandidates
Tags:    

Similar News