செய்திகள்

தலித் வார்த்தையை பயன்படுத்த தடை இல்லை - மத்திய அரசு தகவல்

Published On 2018-09-06 10:53 IST   |   Update On 2018-09-06 10:53:00 IST
தாழ்த்தப்பட்ட பிரிவினரை தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தி குறிப்பிடலாம் என மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. #Dalit
ஐதராபாத்:

தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களை ‘தலித்’ என்று குறிப்பிட்டு வருகிறார்கள். 1940-ம் ஆண்டு ஐதராபாத்தில் சுதந்திர போராட்டத்தின் போது தாழ்த்தப்பட்டோர் ஒன்று கூடி இயக்கம் நடத்தினார்கள். அப்போது ‘தலித்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. 1970-ல் மராட்டியத்தில் ‘தலித் பாந்தர்ஸ்’ என்ற பெயரில் இயக்கம் தொடங்கப்பட்டது.

தற்போதும் தொடர்ந்து ‘தலித்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட பிரிவினரிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சாதி ரீதியாக தங்களை வெளிப்படையாக அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பவில்லை என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் ‘தலித்’ வார்த்தையை பயன்படுத்த மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.

அதில் விவாதங்கள், கட்டுரைகள், மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களில் ‘தலித்’ வார்த்தையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிக்காது.

எனவே தாழ்த்தப்பட்ட பிரிவினரை தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தி குறிப்பிடலாம். அதே சமயம் போலீஸ் புகார்கள், கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் மனுக்களில் ‘தலித்’ என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது. ஏனெனில் அரசியல் சட்டப்படி தாழ்த்தப்பட்டோர் என்ற வார்த்தை மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. #Dalit
Tags:    

Similar News