செய்திகள்

பணி நேரத்தில் ஜீன்ஸ் பேண்ட், கூலிங் கிளாஸ் அணிய அதிகாரிகளுக்கு திரிபுரா அரசு தடை

Published On 2018-08-28 13:46 GMT   |   Update On 2018-08-28 13:46 GMT
அரசு அதிகாரிகள் பணி நேரத்தில் ஜீன்ஸ் பேண்ட், டி-ஷர்ட் மற்றும் கூலிங் கிளாஸ் அணிய கூடாது என திரிபுரா அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அகர்தலா:

திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநில அரசு அதிகாரிகள் உடைக் கட்டுப்பாடு தொடர்பாக முதன்மை செயலாளர் சுஷில் குமார் விடுத்துள்ள சுற்றறிக்கையில், ``பொதுவாக அரசு அதிகாரிகள் உடைக் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

மாநிலத்தில் அரசு அதிகாரிகள் பணி நேரத்தின்போது ஜீன்ஸ் பேன்ட், கார்கோ பேன்ட், டி-ஷர்ட், கூலிங் கிளாஸ் உள்ளிட்டவற்றை அணிவது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. மேலும், பல அரசு அதிகாரிகள்  அலுவலக நேரத்திலும், ஆலோசனைக் கூட்டங்களிலும் மொபைல் போன்களை பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன.

எனவே, திரிபுராவில் அரசு அதிகாரிகள் பணி நேரத்தின்போது ஜீன்ஸ் பேன்ட், கார்கோ பேன்ட், டி-ஷர்ட், கூலிங் கிளாஸ் உள்ளிட்டவற்றை அணிய தடை விதிக்கப்படுகிறது. மேலும், அலுவலக ஆலோசனைக் கூட்டங்களின்போது அரசு அதிகாரிகள் தங்களது மொபைல் போன்களை அணைத்து வைக்க வேண்டும். இதை, உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்’’ என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News