செய்திகள்

தஞ்சை பெரிய கோவிலை புகழ்ந்த மோடி - தமிழ் தொன்மையான மொழி எனவும் பாராட்டு

Published On 2018-08-26 19:30 GMT   |   Update On 2018-08-26 19:30 GMT
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 60 மீட்டர்களுக்கும் உயரமான, 80 டன் எடை கொண்ட கருங்கல்லால் ஆன கோபுரம் தஞ்சை பெரிய கோவில் என மோடி புகழ்ந்து பேசினார். #MannKiBaat #Modi
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

ஒவ்வொரு மொழிக்கும் என ஒரு மகத்துவம் இருக்கிறது. தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி என்பதில் இந்தியாவில் அனைவருக்குமே பெருமிதம் உள்ளது. அதேபோல் வேதகாலம் தொடங்கி இன்று வரை சமஸ்கிருத மொழியும் ஞானத்தை பரப்ப மிகப்பெரும் பங்களிப்பை அளித்து வந்திருக்கிறது.



சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அகன்ற மலையை, தனிப் பெரும் கல்லால் ஆன ஒற்றை மலையை பரந்த அற்புதமான கோவிலாக செதுக்கி இருக்கிறார்கள். அது, மராட்டிய மாநிலம் எல்லோராவில் இருக்கும் கைலாசநாதர் கோவில்தான்.

அதேபோல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 60 மீட்டர்களுக்கும் உயரமான, 80 டன் எடை கொண்ட கருங்கல்லால் ஆன கோபுரம் ஒன்று நிறுவப்பட்டது என்று உங்களிடம் யாராவது கூறினால் உங்களுக்கு நம்பிக்கையே பிறக்காது அல்லவா?... ஆனால் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் அந்த அதிசயத்தைக் காணலாம். இந்த கோவிலில்தான் கட்டிடக்கலை, பொறியியல் கலை ஆகியவற்றின் நம்ப முடியாத இணைப்பினைக் காண முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.  #MannKiBaat #Modi #tamilnews 
Tags:    

Similar News