செய்திகள்

ரபேல் போர் விமானம் விலையை 3 மடங்கு உயர்த்தியது ஏன்? - பிரதமர் விளக்கமளிக்க சிதம்பரம் வலியுறுத்தல்

Published On 2018-08-25 10:41 GMT   |   Update On 2018-08-25 10:41 GMT
ரபேல் போர் விமானத்தின் விலையை மூன்று மடங்கு உயர்த்தியது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என முன்னாள் நிதி மந்திரி ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். #RafaelDeal #Chidambaram #PMModi
கொல்கத்தா:

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பல கோடி ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஆனால் இதில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்நிலையில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:



ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகள் ஏன் தவிர்க்கப்பட்டன? ஒப்பந்த பேச்சுவார்த்தை குழு மற்றும் விலை பேச்சுவார்த்தை குழு ஆகியவை ஏன் இருளில் மறைக்கப்பட்டன? பாதுகாப்பு பற்றிய அமைச்சரவை குழுவும் நம்பிக்கைக்கு உரிய ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ரபேல் போர் விமானம் ஒன்றை 526 கோடி ரூபாய் அளவில் வாங்கியது.  பாஜக தலைமையிலான கூட்டணி அரசு ரபேல் போர் விமானம் ஒன்றை 1,670 கோடி ரூபாய் அளவில் வாங்கியுள்ளது.  இந்த எண்ணிக்கை சரியெனில், போர் விமானம் ஒன்றின் விலை 3 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது ஏன் என்பது குறித்து பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். #RafaelDeal #Chidambaram #PMModi
Tags:    

Similar News