செய்திகள்

சேல்ஸ்மேன்களுக்கு விஷம் வைத்து கொல்ல முயன்ற பெண் கைது

Published On 2018-08-25 13:34 IST   |   Update On 2018-08-25 13:34:00 IST
கொல்கத்தாவில் சேல்ஸ்மேன்களுக்கு விஷம் வைத்து கொல்ல முயன்றதாக பெண்ணை போலீசார் கைது செய்தனர். #BengalHousewife
கொல்கத்தா:

கொல்கத்தாவின் நியூ அலிப்பூரைச் சேர்ந்த மதுமந்தி சகா என்ற பெண், கடந்த மாதம் 27-ம் தேதி உள்ளூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் சமையலறை புகைபோக்கி மற்றும் சில சாதனங்கள் வாங்கி உள்ளார். இதற்காக ரூ.40 ஆயிரத்துக்கு காசோலை கொடுத்துள்ளார். ஆனால் அவரது வங்கிக்கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பிவிட்டது.

இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் மதுமந்தியை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். அப்போது தன் வீட்டிற்கு வந்து பணம் வாங்கிக்கொள்ளும்படி மதுமந்தி கூறியிருக்கிறார்.

இதையடுத்து அவரது வீட்டிற்கு 2 சேல்ஸ்மேன்கள் நேற்று பணம் வாங்க சென்றுள்ளனர். அவர்களுக்கு குளிர்பானம் கொடுத்துள்ளார். குளிர்பானத்தை ஒரு சேல்ஸ்மேன் குடித்ததும் திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இதனால் மற்றொரு சேல்ஸ்மேன் அங்கிருந்து தப்பி ஓடி, நியூ அலிப்பூர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி மதுமந்தியை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சேல்ஸ்மேனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். குளிர்பானத்தில் விஷத்தை கலந்து தன்னை கொல்ல முயன்றதாக அந்த சேல்ஸ்மேன் குற்றம்சாட்டியுள்ளார்.  #BengalHousewife
Tags:    

Similar News