செய்திகள்

ஆந்திராவில் வெள்ள சேத பகுதிகளை சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார்

Published On 2018-08-22 21:11 GMT   |   Update On 2018-08-22 21:11 GMT
ஆந்திராவில் வெள்ள சேத பகுதிகளை மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். #AndhraPradesh #Flood #ChandrababuNaidu
காக்கிநாடா:

ஆந்திராவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 200 கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன. 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலைகள் அடியோடு துண்டிக்கப்பட்டு விட்டது.



மேலும் இந்த 2 மாவட்டங்களிலும் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் முற்றிலுமாக நாசம் அடைந்துள்ளன. இதையடுத்து வெள்ள சேத பகுதிகளை மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். பிறகு அதிகாரிகளுடன் வெள்ள நிலைமை குறித்து ஆய்வும் நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “2 மாவட்டங்களிலும் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டு உள்ளது. பயிர்கள் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். வெள்ளத்தில் முற்றிலுமாக சேதம் அடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும்” என்றார்.  #AndhraPradesh #Flood #ChandrababuNaidu 
Tags:    

Similar News