செய்திகள்

வாராக் கடனை கட்டுப்படுத்த நடவடிக்கை - ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னருக்கு நாடாளுமன்ற குழு அழைப்பு

Published On 2018-08-19 20:20 GMT   |   Update On 2018-08-19 20:20 GMT
வாராக் கடன்களை கட்டுப்படுத்துவது பற்றி குழுவின் உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்கும்படி இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜனுக்கு நாடாளுமன்ற குழு அழைப்பு விடுத்துள்ளது. #RahuramRajan #ParliamentaryPanel
புதுடெல்லி:

நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க முடியாமல் வங்கிகள் கடுமையாக திணறி வருகின்றன.

இந்த நிலையில் மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், பா.ஜனதா தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற மதிப்பீடுகள் குழுவில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன் வாராக் கடன்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டது பற்றி எடுத்துக் கூறி இருந்தார். மேலும் அவரை அழைத்து இதுபற்றி ஆலோசனைகளை கேட்டுப் பெற வேண்டும் என்றும் அரவிந்த் சுப்பிரமணியம் வலியுறுத்தி இருந்தார்.

இதையடுத்து முரளி மனோகர் ஜோஷி, தற்போது அமெரிக்காவின் சிகாகோ நகர வர்த்தக பள்ளியில் பேராசிரியராக பணியாற்றி வரும் ரகுராம் ராஜனை நாடாளுமன்ற மதிப்பீடுகள் குழு கூட்டத்தில் பங்கேற்று வாராக் கடன்களை கட்டுப்படுத்துவது பற்றி குழுவின் உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்கும்படி கடிதம் எழுதி உள்ளார். #RahuramRajan #ParliamentaryPanel
Tags:    

Similar News