செய்திகள்
தாயத்து கொடுப்பதாக 10 வயது சிறுமியை சீரழித்த 80 வயது நபர் கைது
மகாராஷ்டிரா மாநிலத்தில் தாயத்து கொடுப்பதாக 10 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று சீரழித்த 80 வயது நபரை போலீசார் இன்று கைது செய்தனர். #80yearoldarrrested #molestingminorgirl
தானே:
மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள அம்பிவிலி பகுதியை சேர்ந்தவர் யூனுஸ் சையத். 80 வயதாகும் இவர் தோஷம் கழிப்பதற்காக தாயத்துகளை தயாரித்து கொடுப்பதுடன் அப்பகுதியில் மந்திரத்தால் நோய்களை குணப்படுத்துவதாக கூறி தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், அருகாமையில் உள்ள ஒரு குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை தாயத்து தருவதாக கூறி நேற்று பிற்பகல் யூனுஸ் தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தனிமையை பயன்படுத்தி தனது மகளை யூனுஸ் பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, யூனுஸ் சையதை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #80yearoldarrrested #molestingminorgirl